வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க பாரத தேசம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - (2)
1. கட்சி கொடிகள் பல பல வகையாம்
தேசக் கொடியை காக்கவே அவையாம் - (2)
பாரத தேசம் சுதந்தர தேசம்
எத்தனை சலுகை! எத்தனை உரிமை!
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
2. நாவின் மொழிகள் பல பல உண்டு
உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ - (2)
அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
அனைத்து இந்தியர் சமமென வேண்டும் - (2)
ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் - (2)
அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் - (2)
கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் - (2)
சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் - (2)
அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
இந்தியர் யார்?
இந்தியர் யார்? இந்தியர் யார்?
இந்தியர் யார்? இந்தியர் யார்? - (2)
1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்
போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்
தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்
அரசாங்க சட்டங்களை மீறாதவர்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி
கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்
ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்
பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்
தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி
கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்
கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்
கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்
வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி
கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்
குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்
லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்
சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி
கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்
சாலை விதிகளை கடைப்பிடிப்பார்
ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்
உண்மை பிரஜையாக செயல்படுவார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி
கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்
தான தர்மங்களில் பங்கெடுப்பார்
விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்
தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்!
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) இந்தியர் யார்?
மெய்ப்பொருள் இயேசுவே
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
மெய்ப்பொருள் இயேசுவே...
உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
மெய்ப்பொருள் இயேசுவே...
1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே
பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை
சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட
துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்
நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?
என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட
மெய்ப்பொருள் இயேசுவே...
2. பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்
கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட
பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்
மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்தது
சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்
பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்
மெய்ப்பொருள் இயேசுவே...
3. காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்
மனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே
கல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல
மரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்
உன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்
புதிய மனம் பெற சிலுவை வரை வந்து
மெய்ப்பொருள் இயேசுவே...
அழைக்கிறார் நீ ஓடிவா
1. அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா
கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா - 2
2. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே - ஓடிவா
3. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே - ஓடிவா
4. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பிவா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா - ஓடிவா
5. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா - ஓடிவா
பரலோகமே என் வாஞ்சை
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம் - என் (2)
1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா - அதி
2. வித விதக் கொள்கையில்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும் - அதி
3. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி - அதி
4. இயேசுவின் இரத்தத்தினால்
பாவம் கழுவினால் செல்லலாமே
இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் - அதி
அந்த நாள் வந்திடும்
அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
அரியதோர் செய்தி பெற்றோம்
அரியதோர் செய்தி பெற்றோம்
பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம்
தெரிந்தவர் கூறாவிட்டால்
தெரியாதோர் அறிவதெங்கே?
அங்கே ஆயிரம்
அறுவடை ஆயிரம்
இங்கே இயேசுவே
அடியவர் ஆயத்தம்
1. ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு
உண்டு களிக்க காலம் இல்லை
பங்குகளை அனுப்பவேண்டும்
எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும் - அங்கே
2. கண்ணீரோடு விதைத்த விதைகள்
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்
சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம்
பெருக விதைத்தால் பெருக அறுப்போம் - அங்கே
3. ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி
அடியார் பணியில் காணச் செய்யும்
அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி
அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும் - அங்கே
இயேசு பூமியில் ஆட்சி செய்வார்
1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள்
2. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் - இராஜாதி
3. பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்துநீர் துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் - இராஜாதி
4. ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே, முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் - இராஜாதி
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனை தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள் - (2)
1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்றபணி செய்து முடித்தோர் - அழகாய்
2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய்
3. ஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்
அழகாய் நிற்போர் வரிசையில் நான்
ஓர் நாளினில் நின்றிடவும்
இயேசு தேவா வழிநடத்தும் - அழகாய்
அழைப்பின் சத்தம்
அழைப்பின் சத்தம் தொனிக்கும் நேரம்
வாருங்கள் சேருங்கள் (2)
அழைக்கப்பட்டவர் அதிகம் அதிகம்
கீழ்ப்படிந்தவர் கொஞ்சம் கொஞ்சம் - அழைப்பின்
1. அறுப்பு மிகுதி ஊழியர் கொஞ்சம்
எஜமான் நம்மை ஜெபிக்கவே அழைக்கிறார் (2)
தானியேல் போன்ற முழங்கால் தேவை
கண்ணீர் கலந்த ஜெபங்கள் தேவை - அழைப்பின்
2. எழுபது பேரை அழைத்த கர்த்தர்
உன்னையும் என்னையும் அழைக்கிறார் அன்றோ (2)
பர்னபா, பவுலைப் புறப்பட அழைத்தார்
அவர்களின் சபையை அனுப்பிட அழைத்தார் - அழைப்பின்
3. காற்றைக் கவனிப்பார் விதைப்பதும் இல்லை
மேகத்தைப் பார்ப்பவர் அறுப்பதும் இல்லை (2)
வலைகளை எறியும் விசுவாசம் தேவை
சபைகளைக் கட்டும் தரிசனம் தேவை - அழைப்பின்
4. விளைந்த பயிர்களை அறுத்திடும் நேரம்
இணைந்து ஊழியர் உழைத்திடும் நேரம் (2)
இயேசுவின் வருகை நெருங்கிடும் நேரம்
உலகத்தின் முடிவு வந்திடும் நேரம் - அழைப்பின்
அன்பின் ஆண்டவரே
அன்பின் ஆண்டவரே
ஆத்ம அமைதி தந்தீர்
அன்பில் இறுக்கம்
பண்பில் ஒழுக்கம்
என்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2)
1. சொந்தப் பிள்ளையாக
எட்டிக் காயுமான
இந்தப் பாவியையும்
பங்கம் பாசம் காட்டி
அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்
2. வாழ்நாள் முடிவுவரை
தேவ பணிபுரிவேன்
கள்ளம் கபடு இன்றி
கர்த்தர் வழியில் செல்வேன்
அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்
அன்புள்ள இயேசையா
அன்புள்ள இயேசையா
உம்பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளிபிறக்கும்
வாழ்வெல்லாம் வழிதிறக்கும் - 2
1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை - 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள
2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு - 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள
3. தாகம் தீர ஜீவ தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர் - 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள
ஆத்துமாவே ஸ்தோத்தரி
ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
ஜீவனுள்ள தேவனைத் துதி -(3) - அல்லேலுயா
1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும் - (2) - அல்லேலூயா
2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள் - (2) - அல்லேலூயா
3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ - (2) - அல்லேலூயா
4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார் - (2) - அல்லேலூயா
இயேசு என் தலைவர்
இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
சந்தோஷம் சந்தோஷமே
இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
யார் உண்டு சொல் மனமே! (2)
1.நாள் மட்டும் நடத்தினாரே
நன்மையால் சூட்டினாரே
கரம் நீட்டித் தூக்கினாரே
சுகம் சுகம் அவர் நிழலே
முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
எனக்கு ஓர் பொன்னாளே - (2) - இயேசு
2.இந்திய தேசம் வர
இளமையில் எழுந்து நின்றார்
சிறுவனே உட்கார் என்றார்
கேரியோ வென்று வந்தார்
மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
உற்சாகம் செய்வார் இயேசு - (2) - இயேசு
3.ஆசையாய் ஆதரித்தோர்
சீற்றத்தால் அகன்றே போனார்
தேவனோ அவன் அருகில்
அதோனிராம் ஜட்சன் வென்றான்
மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
தேவனைப் பற்றி நீ வாழ் - (2) - இயேசு
4.ஓசன்னா சொன்னோர் எங்கே?
ஓடிடேன் என்றோன் எங்கே?
சிலுவையின் சுமை தணிக்க
பழகியோர் யாரும் இல்லை
இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
அருள் ஈயும் இயேசு நாதா - (2) - இயேசு
செலவிடவும் செலவிடப்பண்ணவும்
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு இராஜாவே, இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம் - இயேசு
1. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜபாதையைச் செம்மையாக்குவோம் - நம்
2. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார்முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் - நம்
3. ஆவி, ஆத்துமா, தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல, அவரே எல்லாம்
என முடிவு செய்தோம், அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் - நம்
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - (2)
1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்
2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்
3. ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்
இயேசுவின் வருகை இன்று
1. இயேசுவின் வருகை இன்று
வெகு சமீபமாய் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
2. பாவத்தில் புரளுவதும், மா சாபத்தில் முடியும் அன்று - நீ - (2)
உன் வாழ்க்கையில் ஒரு திருத்தம் வெகு அவசியமாகின்றது - ஓ மானிடரே
3. அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு - (2)
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே
4. தயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு - நீ - (2)
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே
என்னைப் பின்பற்றி வா
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா - நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் - எந்தன்
இராஜாதி இராஜன்
1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா?
கேள்! கேள்! மானிடரே!
சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா?
2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா? - கேள்! கேள்!
3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா? - கேள்! கேள்!
4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா? - கேள்! கேள்!
இருள் சூழும் காலம்
1. இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும்முன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
பல்லவி
திறவுண்ட வாசல் அடைபடும்முன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
2. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம், ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் - திறவுண்ட
3. இனிவரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே - திறவுண்ட
4. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லாத் தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே - திறவுண்ட
இவை யாரது நாட்கள்
இவை யாரது நாட்கள்?
ஆவியானவர் நாட்கள்
எப்படி நாட்கள்?
கடைசி நாட்கள்,
கடைசி நாட்கள்! - இவை
1. அன்பு தணிவது ஆதாரம்
கோபங்கள், சண்டைகள் ஆதாரம் (2)
தேசங்கள், ராஜ்யங்கள்
யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம் .. (2) - இவை
2. பாவங்கள் பெருகுதல் ஆதாரம்
மனக் கடினங்கள் ஆதாரம் (2)
சோதோம், கொமோராவின்
நாட்களைக் காணுவதும் ஆதாரம் .. (2) - இவை
3. இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்
சமுத்திர அலைகளும் ஆதாரம் (2)
பூகம்பம், புயல்கள்
புவியெங்கும் தொடருதல் ஆதாரம்.. (2) - இவை
4. சுவிசேஷ தீவிரம் ஆதாரம்
சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம் (2)
இயேசுவின் நாமத்தில்
முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம் .. (2) - இவை
உத்தமமாய் முன்செல்ல
1. உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும் (2)
2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) - உத்தம
3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக் கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக்காக்க வழிவகுத்தருளவேண்டும் (2) - உத்தம
4. தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபைசெய்யும் இயேசுதேவா உண்மை வழி காட்டியே (2) - உத்தம
தேவனே உமக்கு ஒப்பானவர் யார்?
உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு?
பாவத்தின்பிடியில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்
1. உலகம், மாமிசம், பிசாசுக்கடியில்
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான் - உம்மைப் போல்
2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும், உருக்கும், உடையும், வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும் - உம்மைப் போல்
3. வீட்டிலும், ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும் - உம்மைப் போல்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இயேசுவே
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இந்தப் பூவிலே
இந்த வாழ்விலே
உம்மையே நோக்கி ஓடுகிறேன் - (2)
1. கவலைகள், கண்ணீர்கள் பெருகும் வேளையில்
அலைகளில் சிக்கியே மூழ்கும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் - உம்மையே
2. சதிகளும் பழிகளும் காணும் வேளையில்
வழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் - உம்மையே
3. நன்மைக்கு தீமைகள் குவியும் வேளையில்
சாத்தானின் சூட்சிகள் அறியும் வேளையில் -(2)
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில் - உம்மையே
உள்ளத்தில் அவர்பால்
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
1. பரமன் பேரிலே பற்று கொண்டோ ரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்!
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்
2. தேசங்கள் தீவுகள், பல பிராந்தியங்கள்,
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே, நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்
3. செல்வம், சீர் சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்
உறக்கம் தெளிவோம்
உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான்
மழை மாரி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்
1. அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும்கொள்வோம்
அவர் படை ஜெயிக்க
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம்
2. கிறிஸ்துவுக்காய்
இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய்
கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை - உறக்கம்
3. அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள்
நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம் - உறக்கம்
4. உயிர் பெறுவீர்
ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா
ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார் - உறக்கம்
ஜெயம் கொள்ளும் தேவனுக்கு ஸ்தோத்திரம்
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே - (2)
1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)
2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன்நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)
3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
ஒலிவ மரத்தின் பலன்கள்கூட அற்றுப்போயினும்
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)
நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி
எத்தனை நாட்கள் செல்லும்
இயேசுவின் சுவிசேஷகம்
அத்தனை நாட்டவரும் அறிய
எத்தனை நாட்கள் செல்லும்? - (2)
1. ஆடுகள் ஏராளம்
அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும்
என் பெலன் தாராளம் - எத்தனை
2. தேவைகள் நிறைந்து நிற்க
வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள்
இணைவது என்று வரும்? - எத்தனை
3. உண்மையாம் கோதுமைகள்
மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா?
நாம் உடைபடும் நாள் வருமா? - எத்தனை
எந்தன் உள்ளம் தங்கும்
1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசுநாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசுநாயகா
இயேசுநாயகா
இயேசுநாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசுநாயகா
2. மாம்சக்கிரியை போக்கும் இயேசுநாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா
இயேசுநாயகா
இயேசுநாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா
3. என்னை உமக்குத் தந்தேன் இயேசுநாயகா
இனிநான் அல்ல, நீரே, இயேசுநாயகா
இயேசுநாயகா
இயேசுநாயகா
இனி நான் அல்ல, நீரே, இயேசுநாயகா
எமைப் படைத்தவரே
1. எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் சமூகமதில் இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2)
எங்கள் இதயங்களில்
உந்தன் வசனம் தாரும்
பாதைக்கு வெளிச்சம் வசனம் - 2
2. சென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள்
எத்தனை அதிகம்! அதிகம்!
வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்
இயேசுவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2) - எங்கள்
3. தூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல
ஆவியின் கிருபை தந்திடும்
உண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று
நிரப்பும், ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! - (2) - எங்கள்
என் உள்ளில் வாரும்
1.என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக்கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!
தேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும் - (2)
என் உள்ளம் இன்றே வாரும்
2.முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே - தேவனே
3.மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே! - தேவனே
4.என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம்
காணிக்கை, ஏற்றருளும்!
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்! - தேவனே
என்னென்று சொல்வேன்
என்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன்
கர்த்தாவின் பேரன்பை விட்டு - (2)
நான் பெற்ற அன்பு எத்தனை அதிகம் - (2)
கர்த்தாவின் இணையற்ற அன்பு - என்னென்று
1. காலையும் மாலையும் கருத்தினில் நிற்கும்
கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு-(2)
நினைவிலும் கனவிலும் நீங்காது நிற்கும் - (2)
கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு - என்னென்று
2. மண்ணில் பிறந்து மண்ணோடு போகும்
மனிதர்க்கு ஏன் இந்த அன்பு - (2)
மதிப்பிற்கு உரியோர், மகிமைக்கு உரியோர் - (2)
என்பதே கர்த்தாவின் தீர்ப்பு - என்னென்று
3. பார்வோனின் அடிமைகள் கண்டதோர் வெற்றி
உலகத்தின் மனிதர்கள் பெற்றார் - (2)
பாவத்தில் வெற்றி மரணத்தில் வெற்றி - (2)
ஏற்பவர் அனைவர்க்கும் வெற்றி - என்னென்று
4. அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் உண்டோ
இயேசுவின் அன்பை போல் உண்டோ - (2)
முகம்பார்த்து அல்ல அகம் பார்க்கும் அன்பு - (2)
அனைவர்க்கும் உரித்தான அன்பு - என்னென்று
கண்களை ஏறெடுப்பேன்
எனக்கு ஒத்தாசை வரும்
பர்வதங்களுக்கு நேராய்
கண்களை ஏறெடுப்பேன் - என்
கண்களை ஏறெடுப்பேன்
1. காலைத் தள்ளாட வொட்டார் - உன்னைக்
காக்கிறவர் உறங்கார்
பகலிலே மேகம்
இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு
2. உன் வலபக்கமாக
கர்த்தர் நிழலாகிறார்
பகலிலே மேகம்
இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு
3. தீங்குக்கு விலக்கிக் காப்பார்
அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்
பகலிலே மேகம்
இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு
4. உன் போக்கையும் வரத்தையும்
இதுமுதல் என்றைக்கும் காப்பார்
பகலிலே மேகம்
இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு
ஒரு நாள் வருவார்
ஒரு நாள் வருவார்
இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
நம் கால மனிதர்
இயேசுவை காண
ஆயத்த மாக்கிடுவோம்
நீ ஆயத்தமாகு
ஆயத்தப் படுத்து
வருகை மிக சமீபம் - ஒரு நாள்
1. தீபத்தில் எண்ணை
வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம்
தாலந்தைத் தரையில்
புதைத்து விடாமல்
ஆயத்தமாகிடுவோம் - நம் கால
2. முந்தினோர் அநேகர்
பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம்
முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார்
ஆயத்தமாகிடுவோம் - நம் கால
3. தேடாதே உனக்கு
பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம்
தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை
ஆயத்தமாகிடுவோம் - நம் கால
கண்கள் பன்னீர் தரும்
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் - 2
கண்ணல்லோ பொன்னல்லோ ஆராரோ ஆரீரோ
1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2 - கண்கள்
2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2 - கண்கள்
கர்த்தர் தாமே
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
நம் பட்சத்தில் நிற்பதால்
சத்ரு வெள்ளம்போல் வந்தாலும்
பத்திரமாய் நிற்கின்றோம்
நம்மை நம்பி, பிறரை நம்பி
நாம் நடந்தால் விம்முவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம்
1. மனித வாழ்க்கை கண்ணீர் என்பார்
உலகில் அநேகர் உண்டல்லோ
கர்த்தரின் துணை அறியார் கூறும்
மன வருத்தம் அதுவல்லோ
துன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள்
எதுவென்றாலும் வெல்லுவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்
2. இம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர்
இனிமேலும் உன்னை நடத்தாரோ
கர்த்தரில் நீ மனம் பதித்து
நிதம் நடந்தால் நடத்தாரோ
மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள்
வியாதி, தோல்வி வந்தாலும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்
3. என் உள்ளத்தில் என் உள்ளத்தில்
வாசம் செய்யும் கர்த்தாவே
இயேசுவில் நான் நேசம் கொண்டு
வளரச் செய்யும் கர்த்தாவே
கறைகள் இன்றி, குறைகள் இன்றி
உலகை கடக்கச் செய்திடும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்
கர்த்தரைத் துதியுங்கள்
கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்
2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்
3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்
4. நம்பினார் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்
5. எல்லாம் அறிந்தவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
எல்லாம் வல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்
கர்த்தனே எம் துணையானீர்
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்
1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார் (2)
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் - கர்த்தனே
2. பாவி என்றெனைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை -கர்த்தனே
4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே உம்மைப் பாடக் கூடுமோ? (2)
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
காணக்கூடாத என் தங்கம்
1. காணக் கூடாத என் தங்கம் அல்லோ
காடு மேடுமாகச் செல்ல அல்லோ
காணாத ஆட்டினைத் தேடி அல்லோ
என் கர்த்தாதி கர்த்தன் அல்லோ...
ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ - (3)
தூங்கு பாலா தூங்கு நீ
ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ
2. விண்ணாளும் மேன்மையைத் தள்ளினாயோ
மண்ணாளும் ராஜனாய்ப் பிறந்தாயோ
உன்னாலும் நாங்களும் வாழ்ந்திடவோ
நீ எந்நாளும் இன்பமல்லோ
-ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ...
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடும் எங்களைக் கருணை பிதாவே
நேத்திரம் போலவே கருணை பிதாவே
பாத்திரமாகவே அருமை பிதாவே நான்
தோத்திரம் பாடுவேன் அருமை பிதாவே - (2)
காத்திடும் எங்களை...
1. பலபல நிலைகளில் அருமைப் பிதாவே - என்
பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே
சகலமும் நீரே சர்வமும் நீரே
சாந்தியும் நீரே சக்தியும் நீரே
பலபல நிலைகளில் அருமை பிதாவே - என்
பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே
காத்திடும் எங்களை...
2. நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என்
நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே
மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே;
வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே
நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என்
நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே
காத்திடும் எங்களை...
காலத்தின் பலனை
1.காலத்தின் பலனை
உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே..
ஞாலத்தில் எனது
வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக - (2)
இயேசுவே நீரே நித்தியர்
தேவனே நீரே நித்தியர்
காலத்தில் அடங்கா
கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்
2.புல்லைப்போல் ஒழியும்
தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே..
குமிழிபோல் தோன்றி
மறைந்திடும் மாயை
உணர்ந்திட உதவிசெய்யும் - (2) - இயேசுவே நீரே
3.உலகத்து ஆசை
மாமிசப் பற்று
சிற்றின்ப சோதனைகள்..
இயேசுவே எங்களை
விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும் - (2) - இயேசுவே நீரே
காலம் கடரும் முன்னர் கருத்தூட்டும்
1. காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச்செல்லச் சேருமே
சுத்தக் கரத்தை உயர்த்தி
பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை
தடுத்து நிறுத்தக் கூடுமே - இன்றே
காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச்செல்லச் சேருமே
2. தன் கடன் செய்யா மனிதர்
கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர்
துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் சொய்யார்
சிரசினில் அடித்துக்கொள்வார்
மாயமாலம் புரிந்தோர்க்கு
செம்மையாயப் பதில் கொடுப்பார் - இன்றே
3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய்
ஜோதியாய் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம்
வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர்
ஆனந்த பாடல் செய்குவார்
இராஜாதி இராஜன் இயேசுவே
நீதியாய் அரசாளுவார் - இன்றே
4. நீ வாழும் இப்பூமி நாசம்
ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி
நீயாக இருக்கலாமே
எழும்பு, எழும்பு தெபொராள்
பாராக்கே, விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை
இன்றைக்கேப் பெற்றெழும்பு - இன்றே
கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம் - (2)
1. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும் - (2) - நாம் கிறிஸ்துவின்
2. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை - (2) - நாம் கிறிஸ்துவின்
3. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரைபடமாயுள்ள
யாரையும் அணுகாது - (2) - நாம் கிறிஸ்துவின்
கல்வாரிக் கருகில் வருவீர்
கூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
உள்ளத்தில் இயேசுவின்பால் அன்புகொண்டோர் யாரும் கூடுவீர் - 2
கல்வாரிக்கருகில் கூடுவீர் - (2)
1. சிறுவர் நடுவர் முதுவர் யாரும் சேர்ந்து கூடட்டும்
உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும் - 2
துதியின் கீதம் எழும்ப ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் - 2
2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
விகற்ப மின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார் - 2
அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்குவார்
கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? - ஆகையால் - 2
3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள்மட்டும்
‘மிஷனரிகள்’ என்ற வார்த்தைப் பேசப்படட்டும் - 2
தியாகம் புரிவார் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
இயேசுவின் உள்ளம் அதனால் பூரிப்பாகட்டும் - ஆகையால் - 2
ஆத்தும நேசரின் காலடிகள்
கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்
ஆத்தும நேசரின் காலடிகள்
பகலினில் வெயிலில் இரவினில் நிலவில்
நாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும்
1. கதவைத் திறந்திட தாமதம் ஏனோ
திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2)
வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன்
நேசரில்லை, காலடிகள் - கேட்டிடும்
2. நேசரின் கால்தடம் பின் செல்லலானேன்
சேர்ந்த இடம் அதோ கல்வாரியே! - (2)
பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது
கல்வாரியே! காலடிகள் - கேட்டிடும்
சரணம் ஐயா தேவனே
1. சரணம் ஐயா தேவனே
சர்வ வல்ல தேவனே - (2)
பாவம் தீர ஜீவன் விட்ட
ஜீவனுள்ள தேவனே - (2)
இயேசுவே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்!
2. பரிசுத்தத்தை சிநேகிக்கும்
பரிசுத்தராம் தேவனே - (2)
இதய சுத்தம் என்னில் காண
என் உள்ளத்தில் இன்று நீர் - (2) - இயேசுவே
3. நித்தம் எம்மை நடத்துவீர்
நம்பினோரை கைவிடீர் - (2)
மக்கள் எல்லாம் உம் படைப்பு
ஒருவரையும் புறக்கணீர் - (2) - இயேசுவே
4. நொறுங்கிப் போன வாழ்வையும்
புதியதாக மாற்றுவீர் - (2)
நொந்துபோன குடும்பங்களையும்
மீண்டும் வாழச் செய்குவீர் - (2) - இயேசுவே
5. ஜெயம் கொடுக்கும் தேவனே
கரம் கொடுத்து நடத்துவீர் - (2)
ஜெயத்திற்கு மேல் ஜெயத்தை காண
என்னுடனே இன்று நீர் - (2) - இயேசுவே
6. அற்புதங்கள் செய்குவீர்
அதிசயங்கள் காட்டுவீர் - (2)
இம்மையிலும் மறுமையிலும்
எங்களை நீர் நடத்துவீர் - (2) - இயேசுவே
சின்ன தம்பியே
சின்ன தம்பியே பாவம் செய்யாதே
சின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2)
சின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2
பாவத்திலே சின்னது பெரியது
என்றும் இல்லையே - (2) - சின்ன தம்பியே
1. பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும்
செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2)
பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2
பாவத்திலே சின்னது பெரியது
எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே
2. பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி
செய்த பாவங்கள் போவதும் எப்படி - (2)
அதற்கு ஒரே வழி கொல்கதா வழி - 2
பாவத்திலே சின்னது பெரியது
எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே
சின்ன சின்ன பிள்ளை
சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க - இது
சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க - (2)
எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க -
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன
1.ஏரோது இராஜாவாயிருக்கலாமுங்க -இவர்
சர்வலோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க
பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2)
2.யூத மதத் தலைவரென்று நினைக்காதீங்க - உங்கள்
மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க
உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன
3.படிப்பு, பவுசு, ஜாதி, நாடு பார்க்காதீங்க - இந்த
பிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க
புதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன
தினம் அகமகிழ்ந்து
தினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து
என் இயேசுவை கைதட்டி துதிப்பேன் - (2)
1. சென்ற கால வாழ்வினில் - (2)
செய்து விட்ட பாவங்கள் - (2)
இயேசு தந்த மன்னிப்பால் - (2)
என்னை விட்டுப் போயிற்று - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்
2. ஜீவ காலம் முழுதும் - (2)
தாம் சொல்வதை நான் செய்யவே - (2)
தம்மிடம் நீர் சேர்த்தீரே - (2)
எத்தனை என் பாக்கியம் - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்
3. இயேசுவே தம் பாதையில் - (2)
எத்தனை என் மகிழ்ச்சி - (2)
நித்தம் நித்தம் வெற்றியே - (2)
எத்தனை என் சந்தோஷம் - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்
4. நீயாயத்தீர்ப்பு நாளிலே - (2)
நாணி வெட்கி போகாமல் - (2)
பாடித் தம்மை போற்றவே - (2)
இப் பாவியை நீர் மீட்டீரே - (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்
தூய்மையே வலிமை
தூய்மையே வலிமை கேளீர்!
வாய்மையே உயர்வு காணீர்!
இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) தூய்மையே
1.சந்திரன் பாதையைக் கண்டாய்
சமுத்திர ஆழத்தை வென்றாய் - (2)
தூய்மையின் பாதைதான் எங்கே?
எனப் பதில் ஏதும் உலகினில் இல்லை! - (2) - தூய்மையே
2.தத்துவம் பேசுவார் உண்டு
தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு - (2)
கல்வி கொடுப்பது அறிவு
ஆனால் தேவன் அருளுவது ஞானம்! - (2) - தூய்மையே
3.அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
பலபல புதுமைகள் நலம்தான் - (2)
யாவையும் கண்ட மனிதா
மன தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! - (2) - தூய்மையே
4.பரிசுத்த ஆவியின் நிறைவு
பரிசுத்தமானதோர் வாழ்வு - (2)
வெற்றியின் ஜீவியம் கொள்ள
இயேசு அழைக்கிறார், இணங்கி நீ செல்ல! - (2) - தூய்மையே
தூய ஆவியானவர்
1.தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
பரிசுத்தப்பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
2.பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும் - பரிசுத்த
3.ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் - பரிசுத்த
4.ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும் - பரிசுத்த
தேவ உலகின் வேந்தரே
தேவ உலகின் வேந்தரே
தேவையுள்ள இடம் வந்தீரோ
ஏழையைப் பார்த்திட வேளையும் வந்ததோ
பாலைவனம் இனி சோலையோ - தேவ
1. கண்ணாடி மாளிகை விட்டோடிப் பீடிகை
மட்டாக வந்தவா எங்கள் பாலா
கண்ணீர் சொரியும் மண்ணின் மடியில்
குடிகொள்ள எண்ணமோ, இயேசுபாலா - (2) - தேவ
2. பெத்லேகேம் ஊரினில், சத்திரம் ஒன்றினில்
நட்சத்திரம் வந்து நிற்பதேன்?
ராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன்
மானிட வடிவாய்ப் பிறந்ததால் - (2) - தேவ
தேவ சேனை
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடிக் குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
2. ஐந்துகண்டம் தனில்ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்
தூயர்கூட்டம் சுத்தஉள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானும் ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே
3. கடல்குமுறும் கரைஉடையும் கப்பல்கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம்கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே
தேவனே உம்மை நான்
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் - (2)
1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)
இரத்தமான தண்ணீர் இரசமானதுவே - (2)
அச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர் - தேவனே
2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் - (2)
ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர் - தேவனே
3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே - (2)
உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம் - தேவனே
தேவை அழைக்கின்றது
தேவை அழைக்கின்றது
உன்னைத் தேவை அழைக்கின்றது
தேவை அழைக்கின்றது
என்னைத் தேவை அழைக்கின்றது
செல்லவோ செலுத்தவோ
தேவை அழைக்கின்றது (2)
தேவை அழைக்கின்றது நம்மை
தேவை அழைக்கின்றது (2)
சிறுவர் நடுவில் தேவை
இளைஞர் நடுவில் தேவை
குடும்பம் நடுவில் தேவை
முதியோர் நடுவில் தேவை
கண்கள் காணும் திசை அனைத்தும் தேவை தேவை தேவை - தேவை அழை
கிராமம் கிராமம் தேவை
நகரம் நகரம் தேவை
சிகரங்களி்லும் தேவை
பாலைவனமும் தேவை
கால்கள் நடக்கும் இடங்கள் எல்லாம் தேவை தேவை தேவை - தேவை அழை
பாவ மன்னிப்பு தேவை
நித்திய ஜீவன் தேவை
மறுபிறப்பு தேவை
மன அமைதி தேவை
அனைத்தும் அருள இயேசு கிறிஸ்து தேவை தேவை தேவை - தேவை அழை
வல்லமை தந்திடும்
பல்லவி
தேவை நிறைந்தவர் இயேசு தேவா
வல்லமை தந்திடுமே - (2)
அனுபல்லவி
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை - (2)
வேளையில் தந்திடுமே - இந்த
வேளையில் தந்திடுமே . . . - (2)
சரணம்
1. நாடுகள் அனைத்திலும் அமைதியே இல்லை
வல்லமை தந்திடுமே - (2)
திறப்பின் வாசல் நின்று
களைப்பின்றி புலம்பபிட - (2)
எங்களை எழுப்பிடுமே - தேவா
வல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை
2. தேவை மிக்க ஒரு நாட்டினைத் தந்தீர்
வல்லமை தந்திடுமே - (2)
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் - (2)
‘கர்த்தரே தெய்வம்’ என்றே - காட்ட
வல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை
3. நித்திய நாட்டிற்கு
மக்களைச் சேர்க்க
வல்லமை தந்திடுமே - (2)
நிலையில்லா உலகில்
நிலைத்திடும் சேமிப்பு - (2)
ஆத்துமாக்கள் மட்டுமே - தேவா
வல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை
நாம் ஒருமித்து
நாம் ஒருமித்து வாழ்வோம் என்றால்
நம் நடுவில் இயேசு நிற்பாரே - (2) - அப்போது
இருபதில் இருபதற்கு மேல் எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால் - எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால்
1. போட்டிகள் பொறாமைகள் கசப்புகள் சதிகள்
எதுவும் எங்கும் இல்லை
சிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம்
என்பது யாரிலும் இல்லை - (2)
பழைய மனுஷன் இல்லை நம்மில்
பாவ சுபாவமே இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
2. கேபா, அப்பல்லோ, பவுல் என்ற
பிரிவினை நம்மில் இல்லை
அவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம்
என்பார் யாருமே இல்லை - (2)
சபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில்
வடக்கு தெற்கும் இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
3. உயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர்
என்ற தத்துவம் இல்லை
இரண்டு டம்ளர் இரண்டு வரிசை என்ற
வித்தியாசம் இல்லை - (2)
அன்பின் வெள்ளம் உண்டு அவைகளை
அடித்துச் செல்லுதல் உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
4. ஒருவர் கால்களை ஒருவர் கழுவும்
பணிவிடை ஆவியே உண்டு
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்
சேவை உள்ளமே உண்டு - (2)
தலைக்கணமே இல்லை நம்மில்
இடைவெளியே இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
5. ஆவியின் வல்லமை அனைவர் தலையிலும்
வந்து இரங்குதல் உண்டு
அற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம்
சபையிலும் தளத்திலும் உண்டு - (2)
பேய்கள் ஓடுதல் உண்டு எங்கும்
விடுதலை ஆவியே உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
6. ஏழு நதியிலும் இரவும் பகலும்
திரு முழுக்குகள் உண்டு
சீரும் சிறப்பும் பெற்று மகிழும்
பாரதம் ஓர்நாள் உண்டு - (2)
சட்டம் ஒழுங்கு உண்டு எங்கும்
நீதி நியாயமே உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ - (2)
1. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே - (2)
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ - பரிசுத்தர்
2. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை - (2)
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் - பரிசுத்தர்
3. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே - (2)
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும் - பரிசுத்தர்
அல்லேலூயா கீதம் பாடுவேன்
1. பார்போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைத்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே
அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா
2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே! - அல்லேலூயா
3. தாழ்மை உள்ளம் கொண்டு பின்செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே
வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே! - அல்லேலூயா
4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்;
என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்
இப்பாதையே என்தன் ஜீவ பாதையே! - அல்லேலூயா
பொங்கி வரும் அருள்
பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே - பொங்கி
1. தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் ஓடியே வா - பொங்கி
2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா - பொங்கி
3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திடவேண்டாம் நீ
அழைக்கிறார் - ஓடியே வா - பொங்கி
பொல்லா உலகில்
பொல்லா உலகில் நல்லோர் இல்லை
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
சீக்கிரம் வருவேன் மறவாதே
நீயோ மகளே அழைக்கப்பட்டாய்
மற்றோரை ஆயத்தம் செய்
அதற்கே மகனே அழைக்கப்பட்டாய்
மற்றோரை ஆயத்தம் செய்
அதற்கே மகளே அழைக்கப்பட்டாய்
1. முந்தினோர் அநேகர் பிந்துகிறார்
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
முடிவு பரியந்தம் போராட
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
2. அப்போஸ்தலர் என்ற வரிசையில்
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
சுவிசேஷ பணியில் முன் நிற்க
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
3. தெபோராளின் கிராமங்கள் அதிகமே
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
நினிவே பட்டணங்கள் பல உண்டே
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
4. உன்னால் இயன்றதை செய்து விடு
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
உன்னுடன் நான் உண்டு முயன்றிடு
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
5. நாளை நாளை என்றோர் பெற்றதில்லை
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
இன்றே இன்றே என்று கிரீடம் பெறு
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
மகிழ்வோம் மகிழ்வோம்
1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ ஆ ஆனந்தமே
பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
2. சின்னஞ் சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டுகொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆ ஆ ஆனந்தமே
3. எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் - ஆ ஆ ஆனந்தமே
4. அவர் வரும் நாளினில் எனைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் - ஆ ஆ ஆனந்தமே
தொழுவத்திலல்லாத ஆடுகள்
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில், பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா? - (2)
பாடு பட்டேன் அதற்காகவுமே
தேடுவார் யார் என் ஆடுகளை ! - மந்தையில்
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு - (2)
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் ! - மந்தையில்
3. எனக்காய் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திடக் கால்கள் வேண்டும் - (2)
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் - மந்தையில்
மன்னிப்பு அருளும்
1. மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ - (2)
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ? - என்னைத்
இது எங்கும் உண்டோ
இது எங்கும் உண்டோ
என்தன் சிந்தைக்கு மேலான
விந்தை அல்லோ? - என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ...
2. கைகளும் கால்களும் செய்தவற்றை - அந்த
ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ - (2)
பல வலைகளில் சிக்கிய பாவி என்னை
இந்த வாதைகள் ஏற்றுநீர் மீட்டதேனோ - இது
3. பவுல் போன்ற தூயவர் செய்த வேலை - இந்தப்
பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ - (2)
உன்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்தத் தரணியில் எம்மிடம் வைத்ததேனோ - இது
மனிதர் எவர்க்கும்
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
பரலோகம் தந்த ஒரே விசேஷம் - (2)
1. பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம்
கடவுள் பலியாக வந்த விசேஷம் - (2)
இயேசுவே அந்த நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
2. சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்
கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம் - (2)
சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
3. பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்
மரணம் மங்களம் என்ற விசேஷம் - (2)
தருணம் இதுவே நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
மாசற்ற தூய நல் அன்பே
மாசற்ற தூய நல் அன்பே அன்பே
மாறிடா மங்கிடா அன்பே அன்பே
காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
உள்ளம் உடைக்கும் அன்பே! - (2) - மாசற்ற
1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
ஓ நல்ல தேவ அன்பே! - (2) - மாசற்ற
2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
என் உள்ளக் கறையை கழுவவோ!
ஏனையா இத்தனை என் மீது அக்கறை
ஓ நல்ல தேவ அன்பே! - (2) - மாசற்ற
3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
என்யாவும் அன்பிற்கே; என்எல்லாம் அன்பிற்கே
உள்ளம் மகிழ்கின்றேனே - (2) - மாசற்ற
மாபெரும் அறுவடை
மாபெரும் அறுவடை ஒன்று
கண் எதிர் தெரிகின்றது
காத்திருக்கும் சபை காட்சி பெறும் இயேசு
வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் - மாபெரும்
1. கோடிக்கோடியாக மக்கள் உண்டு
உடல், உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு - (2)
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்
2. அன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட - (2)
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்
3. உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க!
உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க! - (2)
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க!
பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்
யார் யாரோ வாழ்விலே
யார் யாரோ வாழ்விலே
சிலுவையைக் கண்டீரோ
சிலுவைக்காய் பணிசெய்ய வாரீரோ? - (2)
1.தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? (2)
என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
சிலுவையை எடுத்து வருவோன் யார்? (2) - யார் யாரோ
2.பாவம் உலகைப் பலமாக மூடுது
பக்தர் பலர்கூட சோர்புற்றார் (2)
தீர்க்கதரிசனம் கூறியவர்கூட
பின்வாங்கி இந்நாளில் போய்விட்டார் (2) - யார் யாரோ
3.உலகை பகைத்து, பாவத்தை வெறுத்து
பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (2)
சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! (2) - யார் யாரோ
இயேசுவுக்காய் வாழ்பவர் எத்தனை பேர்?
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
1. மாமிச ஆசையில் சிக்கலுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
சிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் - 2
இவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே - யாருக்காய்
2. பணம் பணம் என்றிடும் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் - 2
ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே - யாருக்காய்
3. கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
வீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு
இந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் - 2
இவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர் - யாருக்காய்
4. உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
கரைந்திடும் உப்பாய் நிற்பாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் - 2
வெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார் - யாருக்காய்
யாரும் காணவில்லையா?
யாரும் காணவில்லையா?
யாரும் கேட்கவில்லையா?
எண்ண முடியா மனிதர்கள்
நித்தம் கடந்து செல்கின்றார்
எங்கே செல்கின்றார் - நீ சொல்
எங்கே செல்கின்றார்? - யாரும்
இரங்கும் ஐயா - இயேசுவே (3)
1. பசியும் பட்டினியுமாய்
போர்க்க எதுவும் இன்றியே
பார்க்க யாரும் இல்லாமல்
நித்தம் கடந்து செல்கின்றார் - எங்கே
2. ஜெபிப்போர் மறைந்து போனாரோ?
கொடுப்போர் குறைந்து போனாரோ?
உழைப்போர் சோர்ந்து போனாரோ?
நரகலோகம் நிரம்புதே! - எங்கே
3. என்னைத் தந்தேன் தந்தையே
உண்மை பாரம் இல்லையே
அர்ப்பணிக்க ஆசையே
சரணம் ஐயா இயேசுவே - எங்கே
வருக வருக
1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே - இன்றே
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே - தினமும்
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே
வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2)
பாத்திரர் தோன்றட்டும்
அற்புதம் நடக்கட்டும்
பிசாசுகள் ஓடட்டும்
கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
2. வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2)
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே - இன்றே
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே - தினமும்
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே
புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)
3. வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2)
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே - இன்றே
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே - தினமும்
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே
இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் - (2)
ஆமென். . .
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி
கதவுகளே விலகியே நில்லுங்கள்
ஏன்?
இராஜா வருகிறார்,
யார்?
இயேசு ராஜா வருகிறார்
1. அலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது
உங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் -(2)
குடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித
மகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும்
- வாசல்களே
2. அவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை
அவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை -(2)
மனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும்
பணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும்
- வாசல்களே
3. அவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை
அந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே -(2)
எரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர்
இறுதி பங்கு இதுவே தேவ சத்தியம் - வாசல்களே
வாலிப வாழ்வில்
1.வாலிப வாழ்வில்
இயேசுவின் நிழலில்
பாவி நீ வந்திடுவாய்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! - (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)
2.அழகும் மறைந்திடும்
பெலனும் ஒடுங்கிடும்
பணமெல்லாம் காலியாகும்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! - (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)
3.உலகினில் தென்படும்
பலவகை அன்பெல்லாம்
இயேசுவைப் போல உண்டோ?
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! - (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)
போவாம் வா என்றார்
1. வானை முட்டும் மரங்கள் மீது
சின்னப் பறவை அமர்ந்திருந்து
தேவன் மேல் ஓர் பாட்டுப்பாடி
என்னை நிற்கச் செய்தது
சிந்திக்கவும் வைத்தது
2. யானைகளின் கூட்டம் ஒன்று
ஓடை ஒன்றின் ஓரம் வந்து
நீளக்கையால் நீரை அள்ளி
மேலே நோக்கி வழங்கிற்று
‘நன்றி’ வழங்கிற்று
3. பறவைகளும் மிருகங்களும்
மறவாதும்மை துதிக்கும் நேரம்
பாவி நானும் பணிந்து வந்தேன்
சிலுவை மரத்தின் நிழலடியில்
‘இயேசுவே’ என்றேன்
4. எந்தன் சிருஷ்டி யாவற்றிலும்
மனிதர்தான் என் மனதில் பிரியம்
உன்னைத் தாழ்த்தி நீ வந்ததால்
என்னை உனக்குத் தருகிறேன்
‘எழுந்திரு’ என்றார்
5. உலகில் ஐந்து கண்டம் உண்டு
கோடிக் கோடி மனிதர் உண்டு
யாவருக்கும் என்னைக் கொடு
உன்னிடம் நானும் வருவேன்
‘போவாம் வா’ என்றார்
6. அன்று பிறந்த எங்கள் பணி
இன்று வரை தொடர்கின்றது
நானும் எந்தன் இயேசுவுடன்
எல்லா திக்கும் செல்கின்றேன்
எல்லோருக்கும் சொல்கின்றேன்
விதைப்பும் அறுப்பும்
1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினில்
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய்
வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே
பல்லவி
சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே - இன்று
பிரதானம்
2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு - சிந்திப்பீர்
3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து - சிந்திப்பீர்
4. ஆழக் கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ? - சிந்திப்பீர்
ஜீவனுள்ள தேவனை
1.ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ?
ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே - நம்மிலே ஜீவனுள்ள
2.மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்
திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் - நம்மிலே ஜீவனுள்ள
3.சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் - நம்மிலே ஜீவனுள்ள
4.பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்
உலகத்தையும் மேன்மையையும் உதறித் தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் - நம்மிலே ஜீவனுள்ள
5.வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்
ஜீவனை வெறுத்து, சிலுவையை எடுத்து
வெற்றிக் கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் - நம்மிலே ஜீவனுள்ள
இன்றும் ஜீவிக்கும் இயேசு
1. ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார் - (2)
2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் - ஜீவிக்கிறார்
3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே - ஜீவிக்கிறார்
ஒரே ஒரு வாழ்க்கை கிறிஸ்துவுக்காகப் பயன்படுத்து
ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே - ஜீவியமே
1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் - 2 ஜீவியமே
2. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்தபின் வருவதாது?
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் - 2 ஜீவியமே
3. அர்ப்பணம் தந்தையே கைஅளித்தேன்
கல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்
செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் - 2 ஜீவியமே
ஜெபித்துவிடு
ஜெபித்துவிடு
யாபேஸ் போன்று
ஜெபித்துவிடு
வளர்ந்து விடு
விசுவாசத்தில் வளர்ந்துவிடு
அநேக ஜாதிகளை - நீ
சுதந்தரித்துவிடு - (2)
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமத்தில்
எல்லாம் கூடும் (2)
தாங்கிவிடு
மனப்பூர்வமாய்
தாங்கிவிடு
பெற்றுவிடு
பன்மடங்காய் பெற்றுவிடு
அநேக நன்மைகளை - உலகில்
பெற்று மகிழ்ந்துவிடு (2) - இயேசுவின் நாமத்தில்
வாழ்ந்துவிடு
சுவிசேஷம் சொல்ல
வாழ்ந்துவிடு
நின்றுவிடு
தெபொராள்போன்று
நின்றுவிடு
அநேக கிராமங்களை – நீ
சுதந்தரித்துவிடு (2) - இயேசுவின் நாமத்தில்